டிஸ்கவரி ‘டிவி’ சேனலின் ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சியாளர் பியர் கிரில்ஸ் உடன் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி இன்று இரவு ஒளிபரப்பாகிறது.
உத்தரகண்ட் மாநிலத்தின் ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் படமாக்கப்பட்ட ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சியில் பியர் கிரில்ஸ் உடன் பிரதமர் மோடி பங்கேற்று உள்ளார்.
சில மாதங்களுக்கு முன் படமாக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இன்று இரவு 9 மணிக்கு டிஸ்கவரி சேனலில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் 180 நாடுகளில் ஒளிபரப்பாகிறது.
www.discoverychannel.co.inஎன்ற இணையதளத்திலும் பார்க்கலாம். மத்திய சுற்றுலா துறை அமைச்சர் பிரஹலாத் படேல் கூறியதாவது: இந்தியாவில் பிரதமர் மோடியை விட பெரிய பிரபலமான நபர் யாருமில்லை.
டிஸ்கவரி சேனலில் அவரின் நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பாகிறது. இந்திய வனத்துறையின் சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.