புளியங்குடி அருகே புளியமரத்தால் போக்குவரத்து பாதிப்பு

0
549

நெல்லை மாவட்டம் முழுவதும் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் இன்று காலையில் புளியங்குடி சொக்கம்பட்டி அருகேயுள்ள சிங்கி லிபட்டி பகுதியில் பழைமையான புளியமரம் ஒன்று வேரோடு கொல்லம்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் சாய்ந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த சொக்கம்பட்டி சப் இன்ஸ்பெக்டர் வேல்பாண்டியன், கடையநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பார்த்தீபன் மற்றும் போலீசார், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஜே.சி.பி.இயந்திரம் மூலம் மரத்தை அகற்றினர். இதையடுத்து வாகனப் போக்குவரத்து சீரானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here