கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்த தங்க நகை வியாபாரி சண்முகம் (67) கடந்த வாரம் சத்தியமங்கலம் தங்க நகை கடையில் இருந்து 2 கிலோ தங்கம் மற்றும் 7.5 லட்சம் ரூபாயுடன் காந்திபுரம் வந்து பைக்கில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்த சிலர் வழிமறித்து சண்முகம் வைத்திருந்த 2 கிலோ தங்கம் மற்றும் 7.5 லட்ச ரூபாய் பணத்தை பறித்து அங்கு இருந்து தப்பி சென்றனர்.
அப்குதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த வடவள்ளி போலீசார், தங்கம் மற்றும் பணத்தை பறித்த கோவை உக்கடத்தை சேர்ந்த அப்துல் ஹக்கீம் (46), அஷ்ரப் அலி (44), தினேஷ் ராவல் (34), ரஞ்சித் சிங் (30), பவார் சிங் (27) வெங்கடாசலம் (31), பவானிசிங் (23) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் கோவையில் உள்ள தங்க நகை கடை ஊழியர்கள். இதனால், சண்முகம் பணம், நகையுடன் செல்வது தெரிந்து, பின் தொடர்ந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் தங்கம் மற்றும் பணத்தை வழிப்பறி செய்துவிட்டு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட இடங்களுக்கு தனித்தனியாக சென்று பதுங்கி இருந்தனர். அங்கங்கு சென்று போலீசார் அவர்களைசுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.














