நெகமம் அடுத்த வெள்ளை கவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்த திரு மூர்த்தி என்பவரின் மகன் கோபாலகிருஷ்ணன்(33). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளது .இவர் அதே பகுதியில் கோழி பண்ணை நடத்திவருகிறார் .இவரது அண்ணன் தேவராஜ் (35) திருமணமாகாதவர். தம்பிக்கு திருமணம் ஆகிவிட்டது, தனக்கு திருமணம் ஆகவில்லை என்ற கோபத்தில் கடந்த சில மாதங்களாக இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று தேவராஜ் தனது நண்பர் கிட்டுசாமி என்பவரின் மகன் ராஜுவை அழைத்துக்கொண்டு தம்பியின் வீட்டிற்கு சென்றார். மேலும் அவரிடம் தகராறு செய்ததோடு தம்பி நடத்தி வந்த கோழிப்பண்ணைக்கு தீ வைத்தார். அருகில் உள்ளவர்கள் உதவியுடன் கோழிப்பண்ணை தீயை தம்பி கோபாலகிருஷ்ணன் அணைத்தார்
. பின்னர் இதுகுறித்து நெகமம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தம்பியின் கோழிப்பண்ணையில் தீ வைத்த அண்ணன் தேவராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர் .மேலும் தலைமறைவாக உள்ள ராஜூவை தேடி வருகின்றனர்.












