இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. தமிழக அரசியல் தலைவர்கள், ‘பாஜக இந்தியை நுழைக்க பார்க்கிறது’ என கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து டுவிட்டரில் வைரமுத்து , ‘சூரியன் கூட ஒட்டுமொத்த பூமியை ஒரே பகலால் இணைக்க முடியவில்லை. இந்தி மட்டும் எப்படி இந்தியாவை இணைத்து விட முடியும்?’ என்று பதிவிட்டுள்ளார்.