சூலூரைஅடுத்த பட்டணம் வெள்ளலூர் ரோடு பகுதியைச் சேர்ந்த சாமுவேல் என்பவரின் மகன் கிருபாகரன் (39). இவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது வீட்டை கோவை இடையர்பாளையம் தேவாங்கர் நகர் பகுதியைச் சேர்ந்த சுந்தரம் என்பவரின் மகன் விஜயகுமார் (36 )என்பவருக்கு வாடகைக்கு விட்டார். .விஜயகுமார் தனது மனைவியுடன் வீட்டில் வசித்து வருவதாக கூறி இருக்கிறார். ஆனால் விஜயகுமாரின் நடவடிக்கைகள் குறித்து பிரபாகரனுக்கு சந்தேகம் எழுந்தது. மேலும் வீட்டிற்கு அடிக்கடி ஆண்கள் வந்து செல்வதாகவும் தகவல் கிடைத்தது.
இதையடுத்து கிருபாகரன் சூலூர் போலீசில் புகார் அளித்தார் .போலீசாரும் விஜயகுமார் மற்றும் அவரது மனைவியின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்தனர். அப்போது விஜயகுமார் வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு மனைவி என்ற கூறிய பெண்ணை விபச்சாரத்திற்கு பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து சூலூர் போலீசார் விஜயகுமார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அங்கு விபச்சாரத்திற்காக மனைவி என்று அழைத்து வந்து நாடகமாடிய பெண்ணை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.