புன்னக்காயல் கிராமத்தைச் சேர்ந்த சோபியா என்பவர் அங்கு ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் பஞ்சாயத்து தலைவரை ஊர் தலைவர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஒதுக்கி வைத்ததாக அவர் மாவட்ட எஸ்பியிடம் வீடியோ ஆதாரத்துடன் சோபியா புகார் அளித்தார்.
அதன் பெயரில் மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் நேரடியாக இவ்விவகாரத்தில் களத்தில் இறங்கி அவர் தலைமையிலான போலீசார் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் இந்த சம்பவத்தின் உண்மை தன்மையை கண்டறிந்து ஊர் தலைவர்கள் உட்பட 10 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.










