டோக்கியோ ஒலிம்பிக்கில் ரீகரவ் தனி நபர் பிரிவில் உலகின் நம்பர் 2 வீரர் கால்சனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் இந்திய வீரர் பிரவின் ஜாதவ்.
முதல் 3 செட்களையும் கைப்பற்றி 6-0 என வெற்றி பெற்றார்.
[
பேட்மின்டன் போட்டிகளின் இரண்டாம் சுற்று ஆட்டம் இன்று நடந்தது.
இதில் இந்தியாவின் பி.வி.சிந்து, சீனாவின் சியுங் ஞன் யி எனும் வீராங்கனையோடு மோதினார்.

ஆட்டத்தின் தொடக்கம் முதலே சிந்துவின் ஆதிக்கமே இருந்தது. நிதானமாகவும், அதேசமயம் அதிரடியாகவும் ஆடினார் சிந்து. முதல் செட்டை 21-9 என கைப்பற்றியவர், இரண்டாம் சுற்றில் சற்றே தடுமாறினார்.
இரண்டாம் செட்டில் சீன வீராங்கனை சிந்துவுக்கு கொஞ்சம் நெருக்கடியை ஏற்படுத்தினார். ஆனால், கவனத்தை சிதறவிடாமல் தொடர்ந்து பக்குவமாக ஆடி இரண்டாம் செட்டையும் 21-16 என கைப்பற்றி வெற்றிபெற்றார் சிந்து. இதன்மூலம் அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார் சிந்து.













