தமிழ்நாடு வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘ வெப்ப சலனம் மற்றும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் அடுத்த இரு நாட்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளது. பருவ மழை சாதக சூழலால் கோவை, நீலகிரியில் மழை பெய்யும்.
தென்மேற்கு வங்க கடலில் காற்று பலமாக வீசும் என்பதால் அப்பகுதிக்கு மீன் பிடிக்க செல்லவேண்டாம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.













