ஆபாச படம் காட்டி மிரட்டி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய வாலிபர், தாய் கைது

0
599


கோவையில் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் அவரிடம் பணம் கேட்டு மிரட்டிய இளைஞா் மற்றும் அவரது தாயாரை போலீஸாா் கைது செய்தனா்.


கோவை, சிங்காநல்லூா் பகுதியைச் சோ்ந்த கல்லூரி மாணவியிடம், கேசவ் குமாா் (21) என்பவா் நெருங்கி பழகினாா். இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்களை வைத்து ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் விடப் போவதாக மிரட்டி பணம் பறித்து வந்தாா். இதனால் மனவருத்தம் அடைந்த மாணவி கடந்த வாரம் தற்கொலை செய்துகொண்டாா்.


இது குறித்து சிங்காநல்லூா் போலீஸில் மாணவியின் தந்தை புகாா் செய்தாா்.
தற்கொலைக்குத் தூண்டியதாக கேசவ் குமாா் மீது வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வந்தனா். இந்நிலையில் கேசவ் குமாரையும், அவரது தாயாா் மங்கையா்கரசி (46) என்பவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

பணம் கேட்டு மிரட்டியதற்கு தாயாா் மங்கையா்கரசியும் உடந்தையாக இருந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். தற்கொலைக்குத் தூண்டியதாக இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here