நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் தற்போது பேரிக்காய்,நாவல் பழங்கள் மரங்களில் அதிகளவில் உள்ளதால் இதனை திண்பதற்காக அருகில் இருக்கும் வனப்பகுதியில் இருந்து கரடிகள் கிராம பகுதிக்கு வரத் துவங்கியுள்ளது
கடந்த சில தினங்களாக 3கரடிகள்
கோத்தகிரி
மிளித்தேன் பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் வந்து மரங்களில் மேல் ஏறி பழங்களை பறித்து அக்கிராம மக்களையும் அச்சுறுத்தி வந்த நிலையில் அந்த கிராமத்தில் கரடியை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து அதன் உள்ளே பழங்கள் வைத்தனர் இன்று காலையில் வந்த ஒரு பெரிய கரடி பழங்களை தின்ன கூண்டுக்குள் சென்றபோது கூண்டில் சிக்கியது

பெரிய கரடி என்பதால் பாதுகாப்பாக கூண்டின் மேல் வலை வைக்கப்பட்டது. அதன் பிறகு கரடியை வாகனம் மூலம் அடர்ந்த வனப்பகுதிக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு விடப்படும் எனத் தெரிவித்தனர்.













