திருச்சி மாவட்டம் சமயபுரம் ஆலயத்தில் விழா நடந்து வருகிறது இங்கு கூட்டத்தில் ஒருவரிடம் கைபேசியை திருடியதாக அரியலூரைச் சேர்ந்த அங்கமுத்து மகன் முருகானந்தத்தை (30)போலீசில் பிடித்துக் கொடுத்தனர்.
சமயபுரம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக வைக்கப்பட்டிருந்த முருகானந்தம் கழிவறையில் புகுந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர் ஆனால் போலீசார் தாக்கியதில் அவர் உயிரிழந்திருக்கலாம் என்று உறவினர்கள் கூறுகின்றனர்.
முருகானந்தம் தாயைக் கொன்ற வழக்கிலும் கைதானவர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.














