மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு உட்பட்ட நிலையூர் பானாங்குளம் கண்மாயில் அடையாளம் தெரியாத உடல் மிதப்பதாக திருப்பரங்குன்றம் காவல்நிலையத்திற்கு தகவல் வந்தது.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மீன் பிடிக்கும் பரிசலில் உள்ளே சென்று பார்த்தபோது ஒரு மூதாட்டி நீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. அவர் உயிரிழந்து மூன்று நாட்களுக்கும் மேலாகியிருக்கும் என கூறிய போலீசார், உடலை கைப்பற்றிய திருப்பரங்குன்றம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தொடர்ந்து, இவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்து தண்ணீரில் வீசப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.















