உடன்குடி பேரூராட்சி தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்த சுடலைமாடன் என்பவர் கடந்த 2023 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார் . அது தொடர்பாக உடன்குடி பேரூராட்சி முன்னாள் தலைவர் ஆயிஷா கல்லாசி, செயல் அலுவலர் பாபு ,தற்போதைய பேரூராட்சி தலைவர் ஹிமைரா ரமீஸ் பாத்திமா , பேரூராட்சி தலைவரின் கணவர் வார்டு கவுன்சிலர் அசாப் அலி பாதுஷா மற்றும் 3 நபர்கள் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வன்கொடுமை வழக்கு பதிவு செய்ய்பட்டு தூத்துக்குடி மாவட்ட பிசிஆர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
அந்த வழக்கில் திருப்பமாக முன்னால் உடன்குடி பேரூராட்சி தலைவர் ஆயிஷா கல்லாசி ஜாமீன் பெறும் போது ஒப்படைத்த தனது பாஸ்போர்ட்டை வெளிநாடு செல்வதற்காக திரும்ப கொடுக்க கோரி கடந்த பிப்ரவரி 06ம் தேதி தூத்துக்குடி மாவட்ட பி சி ஆர் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருந்தார் இந்த மனுவை விசாரித்த நீதிபதி, முறையான காரணங்கள் இன்றி
பாஸ்போர்ட்டை திரும்ப கொடுக்க முடியாது என்று ஆயிஷா கல்லாசி மனுவை தள்ளுபடி செய்தார்.








