தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி கோட்டத்தில் பணிபுரிந்த 14 கிராம நிர்வாக அலுவலர்கள் வெவ்வேறு வருவாய் கிராமங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன் இந்த உத்தரவை பிரப்பித்துள்ளார்.
அதன்படி அமலதாசன் தூத்துக்குடி 1லிருந்து கூட்டுடன்காட்டுக்கும், செந்தில்குமார் உமரிக்கோட்டையிலிருந்து குமாரகிரிக்கும், பாலமுருகன் முள்ளக்காடு பகுதி 1லிருந்து மீளவிட்டான் பகுதி 1க்கும், தீபலட்சுமி அய்யனடைப்பிலிருந்து சங்கரப்பேரிக்கும், ராதா தளவாய்புரத்திலிருந்து தூத்துக்குடி பகுதி 1க்கும், திரேசம்மாள் தெற்கு சிலுக்கன்பட்டியிலிருந்து மீளவிட்டான் பகுதி 2க்கும், பராசக்தி வர்த்தகரெட்டிபட்டியிலிருந்து தூத்துக்குடி பகுதி 2க்கும்,
பெரியநாயகம் தூத்துக்குடி பகுதி 2லிருந்து உமரிக்கோட்டைக்கும், நட்டார் செல்வம் கூட்டுடன்காட்டிலிருந்து தளவாய்புரத்துக்கும், சேர்மலதா குமாரகிரியிலிருந்து திம்மராஜபுரத்துக்கும், ஆரோக்கிய பாத்திமாராணிமீளவிட்டான் பகுதி 2லிருந்து வர்த்தகரெட்டிப்பட்டிக்கும், ஆனந்த அருண்பிரகாஷ் திம்மராஜபுரத்திலிருந்து தெற்கு சிலுக்கன்பட்டிக்கும், எட்டுராஜ் சங்கரப்பேரியிலிருந்து அய்யனடைப்புக்கும், ராஜேஷ் கண்ணா மீளவிட்டான் பகுதி 1லிருந்து முள்ளக்காடு பகுதி 1க்கும் மாற்றப்பட்டுள்ளனர்.









