மதுரையில் ஐந்து பைசா பிரியாணிக்கு முண்டியடித்த மக்கள் – கடையை மூடிய போலீஸ்

0
896

மதுரை செல்லூர் பகுதியில் அக்ஷயா என்பவர் அசைவ உணவகம் ஒன்றை இன்று திறக்கிறார்,இந்த நிலையில் உணவகத்திற்கு விளம்பரம் தேடும் நோக்கோடு இன்று முதல் நாள் பிரியாணி வாங்க வரும் முதல் 100 நபர்களுக்கு 5 பைசா இருக்கு பிரியாணி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு மாநகரம் முழுவதும் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டினர், அதனைத் தொடர்ந்து காலை முதல் நீண்ட வரிசையில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பழைய ஐந்து பைசா உடன் காத்திருந்தனர்,

இருப்பினும் குறைந்த அளவே பிரியாணியில் இருந்த காரணத்தால் நூற்றுக்கும் குறைவான பேருக்கு மட்டுமே பிரியாணி வழங்கப்பட்டது. இதற்கிடையே கூட்டம் முண்டியடித்த தால் அங்கு தள்ளுமுள்ளு நெருக்கடி ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து போலீசார் விரைந்து வந்து கூட்டத்தை கட்டுப்படுத்தி மக்களை விரட்டி அடித்ததோடு கடையையும் மூடினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here