பாட்டாளி எம். எல்.ஏ. நன்மாறன் அரசு ஆஸ்பத்திரியில் காலமானார்

0
517

மதுரை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நன்மாறன் நேற்று இரவு மூச்சு திணறல் காரணமாக அரசு ராஜாஜி மருந்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட நிலையில் சிகிச்சை பலனான்றி இன்று மாலை 4 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 74.

இவர் நடராசன் – குஞ்சரத்தம்மாள் தம்பதியருக்கு மகனாக மதுரையில் பிறந்தவர். இவரது இணையர் சண்முகவள்ளி. குணசேகரன், இராசசேகரன் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

களச்செயல்பாட்டாளர், சொற்பொழிவாளர், எழுத்தாளர் என பன்முகம் கொண்டவராக விளங்கும் தோழர் நன்மாறன் அவர்கள் 2001, 2006 என இரண்டு முறை மதுரை கிழக்கு தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சட்டமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி இருக்கிறார்.


சட்டமன்ற உறுப்பினராக இருந்த வாய்ப்பை, மதுரை மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், ஐ.டி.பார்க், டைடல் பார்க் வரை மதுரைக்கு கொண்டு வரவும் பயன்படுத்திக் கொண்டவர். மதுரையில் உயர் நீதிமன்ற கிளை உருவாக தன் பங்களிப்பை செலுத்தி இருக்கிறார். இன்றும் வாடகை வீட்டில் குடியிருக்கும் கறை படியாத கைகளுக்கு சொந்தக்காரர். சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலங்களில் இவருடைய அலுவலகம் சனி, ஞாயிறு உட்பட அனைத்து நாள்களிலும் திறந்தே இருக்கும்.


1968 இல் குறிஞ்சி இதழை நடத்திவந்த நெடுமாறன் அவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் ஒரு பிரிவாக ‘ஊழியர் கலை எழுச்சி மன்றம்’ என்ற அமைப்பு இருந்தது. இதில் எம்.ஆர்.எஸ்., மணி, புலவர் ராஜாமணி போன்றோர் இருந்தனர். அவர்களுடன் ஏற்பட்ட தொடர்பால் இலக்கிய கூட்டங்களில் கலந்து கொண்டார். 1971 ல் தேர்தல் பிரச்சார மேடைகளில் முதன்முதலாக பேச ஆரம்பித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here