கடையநல்லூர் இக்பால் வடக்குத்தெரு ஓட்டை குடும்பத்தைச் சேர்ந்த சம்சுதீன் மகன் நாகூர் மீரான் ( 47). இவர் கண்மணியாபுரத்தில் தனியார் பால்பண்ணையில் பால் வாங்கி விற்பனை செய்வது வழக்கம் இன்று காலை வழக்கம்போல் ஆட்டோவில் பாலை ஏற்றி கடையநல்லூர் சேர்ந்தமரம் சாலை கண்மணியாபுரம் அருகே வளைவில் வரும்பொழுது எதிர்பாராதவிதமாக தானக ஆட்டோ கவிழ்ந்தது இதில் தூக்கி வீசப்பட்ட நாகூர் மீரான் மீது ஆட்டோ சாய்ந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
ஆட்டோவை ஓட்டி வந்த ஆமினாஅம்மாள் தெருவைச் சேர்ந்த முகம்மது கான் படுகாயமடைந்தார் இது குறித்த தகவலின் பேரில் விரைந்து சென்ற காவல்துறை சம்பவ இடத்தில் இருந்து நாகூர் மீரான் உடலை கைப்பற்றி கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தது இந்த விபத்து குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது
விபத்தில் இறந்த பாலியா வாரி விடுமுறையில் சவுதியிலிருந்து ஊர் வந்தவர். 10 நாளில் மீண்டும் சவுதி அரேபியா செல்ல இருந்த நிலையில் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது