கோவை, பெரியநாயக்கன்பாளையம் அருகே தீபாவளி சீட்டு நடத்தி முதிர்வு தொகை கொடு க்காமல் இருக்க 18 லட்சம் திருட்டு போனதாக நாடகமாடிய நபரை போலிஸார் எச்சரித்து அனுப்பினர். சின்னமத்தம்பாளையம் கோட்டை பிரிவு சிவந்தி ஆதித்தனார் காலனியை சேர்ந்தவர் பிரேம்தாஸ்(40). இவர் நேற்று வீட்டில் வைத்திருந்த ரு 18 லட்சம் திருட்டு போனதாக பெரியநாயக்கன்பாளையம் போலிஸாருக்கு தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்திற்கு சென்ற போலிஸார் சோதனை செய்த போது வீட்டின் முன்புற் தாழ்பாள் உடைக்கப்பட்டு இருந்தது.பீரோவில் இருந்த பணம் கானாமல் போனது தொடர்பாக அருகில் உள்ளவர்களிடம் விசாரணை செய்த போது பிரேம்தாஸ் தீபாவளி சீட்டு நடத்தி வந்ததும் முதிர்வு தொகையை பெற வீட்டுக்கு வந்தவர்களிடம் பணம் கொடுக்காமல் இருக்க பீரோவில் வைத்திருந்த ரூ18 லட்சம் காணாமல் போனதாக நாடகமாடியதும் தெரிய வந்தது.
இது தொடர்பாக போலிசார் பிரேம்தாஸை எச்சரித்து இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் கடுமையான தண்டனை கிடைக்கும் என்றும் சீட்டு போட்டவர்களுக்கு உரிய பணத்தை திருப்பி கொடுக்குமாறும் எச்சரித்து அனுப்பினர்.














