துப்பாக்கி லைசென்சுக்கு தாசில்தாரை மிரட்டிய போலி ஐஏஎஸ் பெண் – பாஜக பிரமுகர் மீது வழக்கு

0
375

தூத்துக்குடி எஸ் பி ஆல்பர்ட் ஜானிடம், ஐஏஎஸ் அதிகாரி என கதை விட்டு பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனையில் அழுத்தம் கொடுத்த டுபாக்கூர் பெண், நெல்லை எஸ்பி சிலம்பரசனிடமும் ஐ ஏ எஸ் அதிகாரி என ஜபர்தஸ்து காட்டியுள்ளார். தனது ஆண் நண்பரான பாஜக பிரமுகர்.துப்பாக்கி உரிமம் பெற, திருநெல்வேலி வட்டாட்சியரை மிரட்டியுள்ளார்.

பாஜக பிரமுகரான அவரது ஆண் நண்பரோ, ஜோதிட திலகம் போல,பிரதமர் உட்பட அனைத்து பாஜக தலைவர்களுடனும் நின்று படம் எடுத்து பெரிய ஆல்பமே போட்டுள்ளார்.

நெல்லை மாவட்டம் தாழையூத்து பகுதியைச் சேர்ந்தவர் ரூபிநாத். பாஜக மாவட்ட தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவர். இவர் தாழையூத்து பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவைகளை நடத்தி வருகிறார் இவர் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடம் துப்பாக்கி உரிமம் கோரி மனு அளித்திருந்தார். துப்பாக்கி உரிமம் வழங்க வேண்டும் எனவும் இந்த விவகாரம் தொடர்பாக மேல அதிகாரிகளிடம் தான் பேசிக் கொள்வதாகவும் நெல்லை வருவாய் வட்டாட்சியர் ஜெயலட்சுமியிடம் மிரட்டியுள்ளார். மாவட்ட எஸ்பி சிலம்பரசனி டமும் போனில் ஐஏஎஸ் தோரணையில் பேசினார்.

இந்த நிலையில் குழப்பத்தில் இருந்த வருவாய் வட்டாட்சியர் உயர் அதிகாரிகளிடம் பேசிய போது, சம்பந்தப்பட்ட நபர்கள் தொடர்பான விசாரணையை மேற்கொள்ள காவல் துறைக்கு அறிவுறுத்தி உள்ளனர்

இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் ரூபி நாத்தின் நண்பரான மங்கையர்கரசி போலி ஐஏஎஸ் அதிகாரி என கண்டறியப்பட்டது இதனை தொடர்ந்து நெல்லை தாசில்தார் ஜெயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் தாழையூத்து போலீசார் மோசடி ஆள்மாறாட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து பாஜக பிரமுகரான ரூபி நாத் மற்றும் வருவாய்த்துறை உயர் அதிகாரிகளை மிரட்டிய போலி ஐஏஎஸ் மங்கையர்கரசி ஆகியோரை கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்

இவர்கள் மீது ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியில் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒரு வழக்காக இந்த வழக்கு அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here