புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி, தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) சார்பில், சட்ட நகல்கள் எரிக்கும் போராட்டம் சிதம்பரநகர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கரும்பன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சட்ட நகல் எரிக்க முயன்ற 2 பெண்கள் உட்பட 45பேரை போலீசார் கைது செய்தனர்.