தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டத்திற்குட்பட்ட பொட்டலூரணி கிராமத்தில் இயங்கி வரும் கழிவு மீன் நிறுவனங்களை மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் ஏற்கனவே வலியுறுத்தி வந்தனர். இந்த நிறுவனத்திற்கு எதிராக போராடிய மக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என அப்பகுதி மக்கள் ஏற்கனவே வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் இன்று அந்த வழியாக வந்த கழிவு மீன் ஏற்றி வந்த கேரள வாகனத்தின் ஓட்டுனர் மது அருந்திவிட்டு அஜாக்கிரதையாக ஓட்டியதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் லாரியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.