கவர்னருடன் எடப்பாடி திடீர் சந்திப்பு

0
1172

தமிழ்நாடு கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திடீரென சந்தித்தார். அவருடன் தலைமைச் செயலர் சண்முகம், சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதார செயலர், டிஜிபி திரிபாதி உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.

கொறோனா நிலவரம் குறித்து தெரிவிப்பதற்காக சென்றதாக கூறப்பட்டாலும் எடப்பாடி பழனிச்சாமி தனியாக கவர்னரிடம் முதல்வர் வேட்பாளர் பிரச்சினையால் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்துப் பேசுவதாக தெரிகிறது.

நாளை மறுநாள் முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கப் போவதாக அதிமுக சார்பில் கூறப்பட்ட நிலையில் எடப்பாடி பழனிச்சாமி யும் பன்னீர்செல்வமும் தனித்தனியாக ஆதரவாளர்களுடன் பேசி வரும் நிலையில் சிக்கல் அதிகரித்துள்ளதாக தெரிகிறது.

பன்னீர்செல்வத்துக்கு பாஜக மேலிட ஆதரவு இருப்பதாக தெரிவதால் முன்கூட்டியே கவர்னரிடம் சில முக்கிய தகவல்களை எடப்பாடி பழனிச்சாமி பேச வேண்டிய நெருக்கடி இருப்பதாகவே தோன்றுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here