பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை : வடமாநில தொழிலாளி ‘போக்சோ’வில் கைது

0
975



கோவையை அடுத்த கருமத்தம்பட்டியில் கிருஷ்ணாபுரம் தொட்டி யங்காட்டில் தங்கி வடமாநிலத்தை சேர்ந்த பல்லுகுஷ்வா (21), என்பவர் கட்டிட வேலை செய்து வந்தார்.
அப்போது அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவி ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது.


நேற்று முன்தினம் மாணவி வீட்டில் தனியாக இருந்தபோது பல்லு குஷ்வா அங்கு வந்தார். அவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.


இதுகுறித்து மாணவியின் பெற்றோர் பேரூர் மகளிர் போலீசில் புகார் அளித்தனர். விசாரணை நடத்தி பல்லுகுஷ்வாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here