சென்னை கோடம்பாக்கத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனியார் உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த
அவர் கூறியதாவது.
பாட வகுப்புகள் மட்டும் இல்லாமல் மாணவர்களும் உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் தர வேண்டும் எனவும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும் .
ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளி திறப்பது குறித்து அறிக்கையை நாளை முதல் வரிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.இது தொடர்பான ஆய்வுக் கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது.
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான திமுகவின் சட்ட போராட்டம் வெற்றி நிச்சயம் வெற்றி பெறும் என்ற அவர்
நீட் தேர்வு வைத்து அரசியல் செய்ய விரும்பவில்லை .
நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை தமிழகத்தில் பாஜக தவிர அனைத்து கட்சிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளது.
நீட் நுழைவு தேர்வு விலக்கு கோரி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அனைத்து கட்சிகளுடன் ஒருங்கிணைந்து சட்ட போராட்டத்தினை நடத்துவார் என்றார் .
இன்றும் நீட் தேர்வு எழுதிய மாணவி ஒருவர் தற்கொலை செய்துள்ளார் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், பள்ளிகளில் வகுப்பு தொடங்கியவுடன் மாணவர்களின் மனநிலையை சரி செய்வதற்கு அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்படும் என்றார் மேலும்
எத்தகைய சூழல் நிலவினாலும் தமிழகத்தில் மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலமாக பாடங்கள் நடத்தப்படும் எனவும்,
தற்போதுசுழற்சி முறையில் ஒரு வகுப்புக்கு 20 மாணவர்கள் அனுமதிக்கப்படுவர்கள் எனவும் குறிப்பிட்டார்.