திருநெல்வேலி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் அலுவலகம் மற்றும் ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி நுண்கலை மன்றம் சார்பில் மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.
நெல்லை _ கன்னியாகுமரி தொழில் தடப்பாதை திட்ட சிறப்பு வருவாய் அலுவலர் ரேவதி தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் மைதிலி, ஆங்கிலத்துறை நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் அழகிய நாயகி மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.
பேரணியில் கலந்து கொண்ட மாணவிகள் மது பானங்கள் மற்றும் கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனர்.









