உற்பத்தியை பெருக்கி விலை குறைப்பை ஈடுகட்டுவோம்: பால்வளத்துறை அமைச்சர்

0
1330

சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமைகத்தில் பொது மக்களுக்கு விலை குறைக்கப்பட்ட பாலை அமைச்சர் நாசர் விநியோகம் செய்தார்.

அப்போது, உற்பத்தியை பெருக்கி, விற்பனையை அதிகரித்து ஆவின் பால் விலை குறைப்பால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்டப்போவதாக செய்தியாளர்களிடம் கூறினார்.

முதலமைச்சர் தன்னுடைய முதல் கையெழுத்திலேயே பால் விலையை குறைத்தது ஆனந்த கண்ணீரை வரவழைத்தது என அவர் தெரிவித்தார்.

நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலான விலையில் ஆவின் பாலை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றூ அமைச்சர் நாசர் எச்சரித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here