நாகர்கோவிலை சேர்ந்தவர் பாலாசிங். மேடை நாடக நடிகரான இவர் நாசர் மூலமாக திரையுலகில் அறிமுகமாகி குணச்சித்திர, வில்லன் வேடங்களில் நடித்துவந்தார்.
சில நாட்களுக்கு முன்பு உணவு அலர்ஜி (ஃபுட் பாய்சன்) காரனமாக காரணமாக விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர், இன்று அதிகாலை 1 மணியளவில் -இறந்தார். காலை 10 மணிமுதல் அவரது உடல் மக்கள் பார்வைக்காக விருகம்பாக்கம் காவல் நிலையத்தை அடுத்துள்ள அவரது வீட்டில் மாலை வரை வைக்கப்பட்டுள்ளது. பின்பு நாகர்கோவிலுக்கு எடுத்துசெல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படுகிறது.