பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலை – குமுளி ராஜ்குமார் கைது

0
6072

கரூர் லாலாப்பேட்டை அருகே கடந்த அக்டோபர் 6ஆம் தேதி அதிகாலை தனது தோட்டத்திற்கு சென்ற பசுபதிபாண்டியன் ஆதரவாளரான கோபால் என்கிற கோபாலகிருஷ்ணன் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு நடத்திய விசாரணையில் 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த குமுளி ராஜ்குமார் (41), தூத்துக்குடி இசக்கி குமார்(49) ஆகிய இருவரையும் ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர்.

யார் தாதா என்ற போட்டியில் இந்த கொலை சம்பவம் நடத்தப்பட்டதாக விசாரித்த போலீசார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here