தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் ஆலன் திலக் கராத்தே பள்ளியின் சார்பில் மாவட்ட அளவிலான கராத்தே மற்றும் சிலம்ப போட்டிகள் இன்று நடைபெற்றது. இந்த போட்டியை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் போட்டியில் பங்கேற்க வந்திருந்தனர்.
இதில் சிலம்பப் பிரிவில் தனித்திறமை மற்றும் சண்டை ஆகியவையும், கராத்தே போட்டியில் கட்டா மற்றும் சண்டை பிரிவு ஆகிய போட்டிகள் நடைபெற்றது. இதில் திரளான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பங்கேற்றனர். தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.










