நெல்லை மாவட்டம் இரவண சமுத்திரத்தில் தெருவிளக்குகள் சரியாக எரிவதில்லை. இதனால் இரவில் பொது மக்கள் தெருவில் நடமாடவே அஞ்சுகின்றனர். ஆனால் பாம்பு,தேள் போன்ற நச்சுயிர்கள் வீடுகளுக்குள் தைரியமாக புகுந்து விடுகின்றன.
நேற்று நள்ளிரவு தாண்டிய நிலையில் ரவணசமுத்திரம் நெடுந்தெருவில் ஒரு வீட்டிற்குள் 7அடி மலைப்பாம்பு ஒன்று புகுந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் அதை லாவகமாக பிடித்து கடையம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
கையோடு, காலையிலேயே,தெருவிளக்குகள் சரிவர எரியாதது சம்பந்தமாக இரவணசமுத்திரம் கிராம தனி அலுவலரிடம் புகார் தெரிவித்து மனுவும் அளித்தனர்.