தமிழக வெற்றிக்கழகத்தின் கொள்கை என்னவென்று பலரும் கேட்டுக் கொண்டிருந்தனர். விக்கிரவாண்டி மாநாட்டில் அதற்கு விடையாக, மதச்சார்பற்ற, சாதி, பாலின பேதமற்ற ‘ செக்யூலர் சோசியலிசம் ‘ தான் கொள்கை என்று பாடல் மூலம் வெளிப்படுத்தப்பட்டது.
மாநாட்டில், ‘வெற்றி, வெற்றி, வெற்றி வாகை வெற்றி, வெற்றி, வெற்றி என்ற கொள்கை பாடல்அறிமுகப்படுத்தப்பட்டது.
பாடலில் நடுவில் வந்த விஜய் குரலின்படி,’ பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவர் வாய்மொழிப் படி சாதிய பாலின பாகுபாடு இல்லாத ‘செக்யூலர் சோசியலிச ஐடியாலஜி தான் தவெகவின் கொள்கை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
மக்கள் யாவரும் பிறப்பால் சமம் என்பது கோட்பாடு. மதம் சாதி நிறம் மோடி பாலின அடையாளம் பொருளாதாரம் என்ற தனி அடையாளத்துக்குள் சுருக்காது, அரசியல் உரிமைகளை வலியுறுத்தி, ‘ எல்லாருக்கும் எல்லாமும் ‘ சமூகத்தை உருவாக்குவது என்று பேராசிரியர் ஒருவர் அதை விளக்கி பேசினார்.
விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம், மாநில தன்னாட்சி, அடிப்படை உரிமைகளை நிலைநாட்டும் நிர்வாகம், அரசியல் தலையீடு அற்ற, லஞ்ச லாவண்யமற்ற நிர்வாகம், தூய குடிநீர், காற்று, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தீண்டாமை ஒழிப்பு, போதை அற்ற சமூகம் போன்றவற்றை வலியுறுத்தி கொள்கை வகுத்துள்ளனர்.
அடுத்து வந்த கேத்ரின், அதை வலியுறுத்தி செயல்திட்டத்தை விளக்கி நிர்வாக சீர்திருத்தம் என்று பேசினார். வர்ணாசிரம கோட்பாட்டை எதிர்ப்பது, மொழி சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு, தமிழ் ஆங்கிலம் என்ற இரு மொழி கொள்கையை வலியுறுத்தி கூறினார். தமிழில் ஆட்சி மொழி,வழிபாட்டு மொழி ஆராய்ச்சி கல்விக்கான மொழி என்றார்.மருத்துவம் கல்வி மாநில பட்டியலுக்கு மாற்ற அழுத்தம் கொடுக்கப்படும்.மாநில அரசினரின் சுயவ மரியாதையை கெடுக்கும் ஆளுநர் பதவியை அகற்ற வலியுறுத்தப்படும் என்றார். பெண்கள் குழந்தைகள் முதியவர் பாதுகாப்புக்கு தனித்துறை உருவாக்கப்படும். மாவட்டம் தோறும் காமராசர் மாதிரி பள்ளிகள் அமைக்கப்படும் எனக்கூறினார்.
நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றப்படும். புதிய ஏரிகள் நீர்த்தேக்கங்கள் அமைக்கப்படும். தமிழர்களின் மரபு வழி தொழிலான பனைத் தொழில் நிலை நிறுத்தப்படும். பதநீர் மாநில பானமாக அறிவிக்கப்படும். அரசு ஊழியர்கள் வாரத்தில் இரு நாட்கள் கைத்தறி ஆடை அணிய உத்தரவிடப்படும்.
மட்பாண்ட பொருட்கள் அரசு உணவகங்கள் விடுதிகளில் பயன்படுத்தப்படும். மணல் கொள்கை,நிலத்தடி நீர் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தொழிற்சாலை உரிய விதிகளை பின்பற்றுவதையும், அதன் மாசு அளவை கட்டுப்படுத்தும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் செயல்படாமல் இருப்பதால் அது சீர்திருத்தப்படும் என்றார்.