தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தங்கப்ப நகரைச் சேர்;ந்த லாரி டிரைவர் இளங்கோவனின் மனைவி கற்பகம்(34), அவரது மகள் தர்ஷினி (7) இருவரும் அப்பகுதியில் உள்ள ஹோட்டலில் கடந்த 12ஆம்தேதி சிக்கன் கிரேவி வாங்கி சாப்பிட்டுவிட்டு, குளிர்பானம் குடித்த போது திடீரென மயங்கி விழுந்தனர். கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்தனர்.
இது குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். தாய், மகள் சாவுக்கு கிரேவி, குளிர்பானம் தான் காரணமா அல்லது வேறு எதுவும் காரணமா என்ற கோணத்தில் விசாரித்தனர். இந்த சூழ்நிலையில் கற்பகம் பயன்படுத்தி வந்த செல்போனை ஆய்வு செய்த நிலையில் கற்பகம் வீட்டின் அருகே இருக்கும் வீரப்பெருமாள் (34) என்பவர் கற்பகத்திற்கு அடிக்கடி போன் செய்திருந்தது தெரியவந்தது.
கற்பகத்திற்கும் வீரப்பெருமாளுக்கும் தொடர்பு இருந்துள்ளது. இடையில் வீரப்பெருமாளுடன் பேசுவதை கற்பகம் தவிர்த்து வந்துள்ளார். இதனால்அவர்கள் இருவரும் ஒன்றாக இருந்த போது எடுத்த படம் மற்றும் வீடியோவை காட்டி வீரப்பெருமாள் மிரட்டி வந்தது தெரியவந்துள்ளது. தன்னுடைய கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் படம் மற்றும் வீடியோவை காண்பித்து விட்டால் அவமானம் ஏற்பட்டு விடும் என்ற கருதிய கற்பகம் உணவு அல்லது குளிர்பானத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. போலீசார் வீரப்பெருமாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
.










