நம் முன்னோர்கள் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்த காய் புடலங்காய். இதன் பயன் அறிந்து தான் சமையலில் வாரம் ஒரு முறை இக்காயை உண்டு வந்துள்ளனர். இது ஓர் அற்புதமான சத்துள்ள உணவு.
புடலங்காயில் பிஞ்சு அல்லது நடுத்தர வளர்ச்சி உள்ள காயையே பயன்படுத்த வேண்டும். புடலங்காய் மிகுந்த மருத்துவ குணம் கொண்ட காய்களில் ஒன்று.
மெலிந்த தேகம் இருபவர்கள் அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேகம் பருமன் அடையும். அஜீரண கோளாறு அகன்று, எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும். குடல் புண்ணை ஆற்றும். வயிற்று புண், தொண்டை புண் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோயின் பாதிப்பு பெருமளவு குறையும். இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கலை போக்கும் தன்மை உடையதாக இருக்கிறது.
மூல நோய் உள்ளவர்களுக்கு புடலங்காய் நல்ல மருந்து. நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து, ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதலை குணப்படுத்தும். கருப்பைக் கோளாறுகளை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. கண் பார்வையை அதிகரிக்கச் செய்கிறது. இதில் அதிகம் நீர்ச்சத்து இருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற உப்பை, வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேற்றும். வாத, பித்த, கபங்களால் ஏற்படும் நோய்களை போக்கும்.















