தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் சமேத முத்தாரம்மன் கோவில் தசரா உலக பிரசித்தி பெற்றது.
இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, சுவாமிகளின் வேடங்களை அணிந்து நேர்த்திக் கடன்களை செலுத்தி வழிபடுவார்கள்.
இந்த ஆண்டு தசரா திருவிழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10-ம் நாளான அக்டோபர் மாதம் 8-ந்தேதி இரவில் விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறது.
தசரா திருவிழாவில் வேடம் அணியும் பக்தர்கள் நேற்று காலையில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் கடலில் புனித நீராடி, அம்மன் பாதத்தில் துளசி மாலை வைத்து வழிபட்டு அர்ச்சகர் குமார் பட்டர் கைகளால் துளசிமாலையை அணிந்து கொண்டனர்
விரதம் தொடங்கிய பக்தர்கள் தங்களது ஊர்களுக்கு சென்று, கோவிலின் அருகில் தசரா பிறை அமைத்து, அதில் தங்கியிருந்து அம்மனை வழிபடுவார்கள்.








