மூலக்கரைப்பட்டி பள்ளி மாணவர்களின் வரலாற்று சுற்றுலா

0
1124

தமிழர்கள் வரலாறு பற்றிய விழிப்புணர்வு மேலோங்கும் இந்த காலகட்டத்தில் அதைப் பற்றிய தெளிவுக்கு வரலாற்று தொடர்புடைய இடங்களுக்கு சுற்றுலா செல்வது பயனுள்ளதாக இருக்கும்.

அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை அகஸ்டினாள் ஜெப ராணி வழிகாட்டுதலோடு, வரலாற்று சுற்றுலாவுக்கு மாணவ, மாணவியர் அழைத்துச் செல்லப்பட்டனர்.

தமிழாசிரியை சாரதா, அறிவியல் ஆசிரியை செல்வி வேளாங்கண்ணி, சமூக அறிவியல் ஆசிரியர்கள் பார்வதி, முருகன் ஆகியோர் அடங்கிய குழு மாணவர்களை அழைத்துச் சென்றது.

நாயக்கர் கால சிற்பக் கலைகள் பற்றி அறிந்து கொள்வதற்காக ககிருஷ்ணாபுரம் கோவிலுக்கும்,

பழந்தமிழக வரலாற்றை அறிந்து கொள்ள ஆதிச்சநல்லூருக்கும் அவர்கள் சென்றனர்.

கணேசன், அருண் பிரசாத் ஆகியோர் அந்தந்த இடங்களை பற்றி அவர்களுக்கு விளக்கம் அளித்தனர்.

எழுத்தாளர்கள் முத்தாலங்குறிச்சி காமராசு , இதழாளர் அய்கோ ஆகியோர் வரலாற்றுச் சுற்றுலாவுக்கு உறுதுணையாக இருந்ததாக ஆசிரியர்கள் குறிப்பிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here