திசையன்விளை அருகே உள்ள ரமதப்புரத்தைச் சேர்ந்தவர் மாதவி (50). இவர் சீலாத்துக்குளம் அருகே உள்ள நடு ஆறுபுளி ஆர் சி பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இன்று காலை 10 மணி அளவில் ஸ்கூட்டரில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தார். சீலாத்திகுளம் அருகே முடவன்குளம் சாலையில் சென்றபோது கல்குவாரியிலிருந்து அதிக பாரம் ஏற்றிவந்த கனரக வாகனம் மோதி அதே இடத்தில் உடல் நசுங்கி இறந்தார்.









