மதுரையில் கடந்த 2020ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா கால நிவாரணமாக அரிசி, பலசரக்கு,பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கவதற்காக 30லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் மாவட்டத்தில் உள்ள 2ஆயிரத்தி 500பேருக்கு வழங்கிய நிலையில் நிதி ஒதுக்கீட்டில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ஜெயசீலி முறைகேடு செய்துள்ளதாகவும், மதுரை மாவட்டத்தில் கொரோனா காலகட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட நிவாரண உதவிகள் வழங்கியது குறித்த விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக கேள்வி கேட்டு விண்ணப்பித்த போதிலும் பொது அலுவலர் தகவல் தரமறுப்பதாகவும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மீது விசாரணை நடத்த கோரி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் பார்வையற்றோர் மறுவாழ்வு நலச்சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.
இது குறித்து பேசிய பார்வையற்றோர் மறுவாழ்வு நலச்சங்க தலைவர் குமார்,
மதுரை மாவட்டத்தில் 4ஆயிரத்தி 800க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டிய கொரோனா நிவாரண உதவிகளை 2500பேருக்கு மட்டுமே வழங்கிவிட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முறைகேடு செய்துள்ளதாக குற்றஞ்சாட்டினார்.















