தமிழ்நாடு கர்நாடகாவில் 23 இடங்களில் என்.ஐ.ஏ.சோதனை – 100க்கு மேற்பட்ட ஆவணங்கள் கைப்பற்றல்

0
507


,

தமிழகம், கேரளா,ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மாவோயிஸ்ட் அமைப்பினருடன் தொடர்பில் இருக்கும் நபர்களின் 23 இடங்களின் இன்று காலை 6.30 மணி முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் இந்த சோதனையானது மூன்று இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாக கேரள போலீசாரல்  கைது செய்யப்பட்டு கேரள சிறையில் இருக்கும் மருத்துவர் தினேஷ்  மற்றும் டேனிஷ் ஆகியோரின் வீடுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

கோவை புலியகுளம் பகுதியில் உள்ள மருத்துவர் தினேஷ் வீடு மற்றும் சுங்கம் பகுதியில் உள்ள டேனிஷ் வீடு ஆகிய இடங்களில்  என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதே போல்

பொள்ளாச்சியில்  சந்தோஷ் என்பவரது வீட்டிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதே போல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் பல குழுக்களாக பிரிந்து இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here