தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வீரபாண்டிய பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு பாத யாத்திரையாக மார்கழி மற்றும் தை மாதங்களில் வருடம் தோறும் சென்று வருகின்றனர்.
அந்த வகையில் இன்று காலை புறப்பட்டு திருச்செந்தூரில் இருந்து இருக்கன்குடி நோக்கி யாத்திரையாக மதுரை டு தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றுள்ளனர்.இன்று மாலையில் ஓட்டப்பிடாரம் அருகே குறுக்கு சாலை அருகில் உள்ள பாலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது தூத்துக்குடியில் இருந்து மதுரை நோக்கி சென்ற கார் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது மோதியதில் வீரபாண்டிய பட்டினத்தைச் சேர்ந்த சுந்தரராணி 60 இசக்கியம்மாள் 55 கரம்பவிளையைச் சேர்ந்த கஸ்தூரி 55 ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்
சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஓட்டப்பிடாரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயர்ந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து காயம் அடைந்த பக்தர்களையும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் சம்பவ இடத்தை மணியாச்சி சரக டிஎஸ்பி அருள் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு விபத்து ஏற்படுத்திய கார் டிரைவரான தஞ்சாவூரைச் சேர்ந்த ராம் பிரசாத் 32 என்பவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்









