பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை – வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

0
438


கோவையை சேர்ந்த 17 வயது சிறுவன் பிளஸ்-2 படித்து வருகிறார். அவருடைய தம்பி 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் குனியமுத்தூர் வசந்தம் நகர் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான ஆசிக் ( 23) என்பவர் 2 பேருக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.


தொடர்ந்து அவர் 2 பேரையும் செல்வபுரம் உள்ளிட்ட பல இடங்களுக்கு அழைத்துச்சென்று பாலியல் தொந்தரவு கொடுத்து உள்ளார். இது குறித்து தகவல் அறிந்த அந்த மாணவர்களின் தந்தை கோவை மேற்கு மகளிர் போலீசில் புகார் செய்தார்.


அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் ஆசிக் 2 மாணவர்களையும் பல இடங்களுக்கு அழைத்துச்சென்று பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிக்கை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பெருந்துறை சிறையில் அடைக்கப்பட்டார்.


.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here