அயோத்தியில் பாபர் மசூதி உள்ள 2.77 எக்கர் நிலம் யாருக்கு என்பதில் 3 தரப்பினருக்கு நடந்த வழக்கில் உச்சநீதிமன்றம் விசாரணையை தீவிரப்படுத்தியிருந்தது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் ஓய்வு பெறுமுன்பு தீர்ப்பளிக்க அவசரம் காட்டினார். எனவே, தினமும் வழக்கு நடத்தப்பட்டது.
இன்றுடன் விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.














