கோயிலை திறக்க முதல்வரிடம் மனைவி எடுத்துக்கூற வேண்டும்: இந்து முன்னணி தலைவர் பேட்டி

0
544


கோவை மாநகர் மாவட்ட இந்துமுன்னணியின் பொதுக்குழு கூட்டம், பேரூர் பகுதியில் உள்ள, சாந்தலிங்க அடிகளார் தமிழ்கல்லூரியில் நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியினை,
இந்துமுன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்,



முகலாயர்கள் ஆட்சிக்காலத்தை விட தி.மு.க அரசின் ஆட்சி இந்துக்களுக்கு எதிராக செயல்படுகிறது எனவும் முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் புரட்டாசி அமாவாசை தினத்தன்று கூட கோவில்களை பூட்டியதை இந்துமுன்னணி வன்மையாக கண்டிக்கிறது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறுகையில்,: தற்போது தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் இந்த விஷயத்தில் சொந்தமாக செயல் படவில்லை எனவும், அவரை சூழ்ந்து இருக்கும் கிறிஸ்தவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டு அவர் இந்துக்களுக்கு எதிராக செயல்படுவதாக குற்றம் சாட்டினார் .இதனை தமிழக முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின், முதல்வருக்கு எடுத்துக் கூறி இந்துக்களின் மத வழிபாட்டிற்கு வழிவகை செய்ய வேண்டும் என தெரிவித்தார்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here