சென்னை கந்தன் சாவடியில் உள்ள 12 தளங்களை கொண்ட ஐடி நிறுவனத்துக்கு தொலைபேசியில் மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். காவலாளியிடம் தொலைபேசியில் பேசி இந்த மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய்களுடன் வந்து சோதனையில் ஈடுபட்டனர். வெடிகுண்டு மிரட்டல் வந்தபோது மூவாயிரத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் பணியில் இருந்துள்ளனர். ஐடி ஊழியர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை வெளியேற்றிவிட்டு சோதனை நடத்தப்பட்டது.