தெலுங்கானா கவர்னராக தமிழிசை

0
606

தமிழ்நாடு பாரதீய ஜனதா தலைவர் பொறுப்பிலிருந்து தமிழிசை விடுவிக்கப்படுவார் என்பது ஏற்கனவே நிலவிய வதந்தி. அதை உறுதிப்படுத்துவதுபோல் பொன் ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் பேட்டியில் கூறியிருந்தார்.
அதற்கேற்ப இன்று தமிழக பாஜக தலைவர் பொறுப்பிலிருந்து தமிழிசை நீக்கப்பட்டுள்ளார். அவர் தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு பதில் வானதி சீனிவாசனோ, நயினார் நாகேந்திரனோ பாஜக தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. நயினார் இந்திய தலைமையை நெருக்கினாலும், வானதி முன்னிலையில் இருப்பதாக கட்சி வட்டாரம் தெரிவிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here