தூத்துக்குடி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முரளி கண்ணன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று (ஆகஸ்ட் 23) மாவட்டம் முழுவதும் உள்ள 88 ரேஷன் கடைகளில் திடீர் ஆய்வு நடத்தினர். இதில் பல்வேறு இடங்களில் உள்ள ரேஷன் கடைகளில் முறைகேடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்தந்த கடை விற்பனையாளர்களுக்கு மொத்தமாக சேர்த்து 50,213 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.








