வடமாநில வாலிபர் அடித்து கொலை: 4பேருக்கு வலை

0
599


பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் சந்தோஷ் குமார் ( 22). இவர் சூலூர் அடுத்த தென்னம்பாளையம் பெரிய தோட்டத்தில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்தார். இவரு டன் ராஜேஷ் குமார் சவுத்ரி (24), ரஞ்சித் சவுத்ரி (22) ஆகியோர் தங்கியிருந்தனர் .கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பீகார் மாநிலத்தைச் சேர்ந்த உகன் சவுத்ரி என்பவர் அங்கு வந்தார். அவர் தென்னம்பாளையத்தில் அவர்களுடன் தங்கி இருந்து வேலை செய்து வந்தார்.இவர்கள் 4 பேரும் ஒன்றாக சேர்ந்து சமைத்து சாப்பிட்டு வந்தனர்.இந்த நிலையில் உகன்சவுத்ரி சாப்பாட்டு செலவிற்கு உரிய பணத்தை கொடுக்கவில்லை.


இதை சந்தோஷ் குமார் அவரிடம் கேட்டார் .இதனால் அறையை காலி செய்துவிட்டு  பீகார் மாநிலத்தை சேர்ந்த தனது நண்பர்களான உகன் சவுத்ரி, சங்கர் மாஜி, கணேஷ் மாஜி பிந்துமா ஜி ஆகியோருடன் தங்கினார். இந்த நிலையில் .நேற்று உகன் சவுத்ரி   ராஜேஷ்குமார் சவுத்ரிக்கு போன் செய்து செங்கோட கவுண்டன் புதூர் வருமாறு கூறினார்.ராஜேஷ்குமார் சந்தோஷ்குமார் ,ரஞ்சித் சவுத்ரி ஆகியோர் செங்கோட கவுண்டன் புதூர் சென்றனர். அங்கு குடிபோதையில் நின்று கொண்டிருந்த உகன் சவுத்ரி சங்கர் மாஜி, கணேஷ்மா ஜி, பிந்துமா ஜிஆகியோர் சேர்ந்து ராஜேஷ் குமார் சவுத்ரி, சந்தோஷ் குமார் ,ரஞ்சித் சவுத்ரி ஆகியோரை இரும்புத் தடியாலும், கல்லாலும் தாக்கினார்கள்.

இதில் 3 பேரும் படுகாயமடைந்தனர். ராஜேஸ்குமார் சவுத்ரியும், ரஞ்சித் சவுத்ரியும்சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சந்தோஷ் குமார்  கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சந்தோஷ்குமார் நேற்றிரவு இறந்தார் .இதுகுறித்து ராஜேஷ் குமார் சவுத்ரி சூலூர் போலீசில் புகார் செய்தார் .இன்ஸ்பெக்டர் மாதையன் வழக்குப்பதிவு செய்து உகன் சவுத்ரி, சங்கர் மாஜி’ கணேஷ்மாஜி, பிந்து மாஜி ஆகியோரை தேடி வருகிறார் .இவர்கள் 4 பேரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here