விஷம் குடித்து டி.எஸ்.பி அலுவலகத்தில் மயங்கிய பெண் போலீஸ்

0
556

,

கோவை காரமடை கணுவாய் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுதா (40). இவர் காரமடை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி அலுவலகத்திற்கு  மாற்றப்பட்டார். இந்த நிலையில் சுதாவிற்கும் அவரது கணவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. கடந்த சில நாட்களாக மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த சுதா நேற்று விரக்தியடைந்து சாணி பவுடரை குடித்தார். பின்னர் வழக்கம்போல டி.எஸ்.பி அலுவலகத்திற்கு வேலைக்குச் சென்றார்.

அங்கு திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சக போலீஸ்காரர்கள் அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் விஷம் குடித்து உள்ளதாக தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவருக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக அன்னூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here