திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் போளூர் சாலை மில்லத் நகர் பகுதியிலுள்ள தமுமுக நகர அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் ஜான்முகமது குடியுரிமை திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை கைவிடக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட துணை தலைவர் முகமதுரியாஸ் முன்னிலையில் 30க்கும் மேற்பட்ட மாவட்ட, நகர, ஒன்றிய தமுமுக நிர்வாகிகள் பங்கேற்று முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின் பின்பற்றி கையில் கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகையை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.















