கோவையைச் சோ்ந்த 17 வயது சிறுமி. பிளஸ் 2 படித்து வரும் இவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு மாயமானாா். இது குறித்து அவரது பெற்றோா் அளித்த புகாரின்பேரில் சாய்பாபா காலனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.
விசாரணையில், வடவள்ளி அருகேயுள்ள நாகராஜபுரத்தைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் ராமகிருஷ்ணன், மாணவியைக் காதலித்து வந்ததும், அவா் மாணவியைக் கடத்திச் சென்று திருமணம் செய்ததும் தெரியவந்தது. மேலும், அவா் தனக்கு ஏற்கெனவே திருமணம் ஆனதை மறைத்து மாணவியைத் திருமணம் செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், ஆட்டோ ஓட்டுநா் ராமகிருஷ்ணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.












